இயக்குனர் ஹரி வேண்டுகோள்..

இயக்குனர் ஹரி அவர்கள் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என எல்லா ஏரியாக்களிலும் கில்லி. நடிகர் பிரஷாந்த் அவர்களை வைத்து ‘ தமிழ் ‘ என்கிற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் ஹரி.

இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெற்றியே ! ஆனால் சமீபகாலத்தில் தோல்வியை சந்தித்து வந்த இயக்குனர் ஹரி, சாமி 2 – க்கு பிறகு படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார். மேலும், நடிகர் சூர்யாவுடன் மீண்டும் அருவா என்று ஒரு படம் செய்வதாக அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று வரும் October மாதம் 30 ஆம் தேதி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆக்வுள்ளது. இதை பல திரையரங்கு உரிமையாளர்கள் கண்டித்து வருகிறார்கள்.

இதை தொடர்ந்து, இயக்குனர் ஹரி அவர்கள் சூர்யா அவர்களுக்கு OTT வேண்டாம், உங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில், “இதுவரை நாம் செய்த படங்கள் எல்லாம் திரையரங்கில் Release ஆனதால் மட்டுமே நாம் இந்த உயரத்தில் உள்ளோம். OTT முடிவில் மறுபரிசீலனை செய்தால்,சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்” என்று கூறியுள்ளார்.



