நம்ம மாளவிகா மோகனுக்கு திருமணமா? அவரே சொன்ன தகவல்!!

876

மாளவிகா மோகனன்..

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களை மனதை கொள்ளையடித்துவிட்டார். தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் வருகிற 15ம் தேதி வெளியாக இருக்கிறது. சோசில மீடியாவில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன், அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரசிகருடன் கலந்துரையாடும் போது, திருமணம் தொடர்பாக கேள்வி கேட்டார். இதற்கு மாளவிகா, நான் திருமணம் செய்து கொள்ள ஏன் என்னை அவசரப்படுகிறீர்கள்? என்று பதிவிட்டுள்ளார்.