பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ராவுக்கு இவருடன் திருமணமாம்… புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்!

1126

நடிகை சித்ரா…

பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக இருந்து, பின்பு சீரியல் காதபத்திரங்கள் நடிக்க ஆரம்பித்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் சித்ரா.

இவர், தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம்மில் சமீபத்தில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

ஆனால், ரசிகர்களோ இதுவும் போட்டோஷூட் புகைப்படம் தான் என நினைத்திருந்தனர்.

ஆனால் அது உண்மையில் நிச்சயதார்த்தத்திற்கு தயாரான புகைப்படமாம்.

பின்னர் மணமக்கள் இருவரும் மேடையில் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

சித்ராவுக்கும், ஹேமந்த் என்ற தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இதில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சித்ராவின் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.