55 வயது நடிகருடன் காதலா? வெளிப்படையாக பேசிய பிரியா பவானி ஷங்கர்!!

1234

பிரியா பவானி ஷங்கர்…

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி ஷங்கர், இவர் வைபவ் நடிப்பில் கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான மேயதா மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து இவர் பல பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து குறுகிய காலத்திலேயே சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்துவிட்டார்.

சமீபத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்திற்கு ரசிகர்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை. இதனை அடுத்து அவர் நடித்து டி மான்டி காலனி 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. நடிகை பிரியா பவானி ஷங்கர், நடிகர் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது கிசுகிசுக்கள் வெளிவந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பிரியா பவானி, “மான்ஸ்டர் படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யா பொம்மை படத்தில் நடித்திருந்தேன்.ராதாமோகன் சாரும், எஸ்.ஜே.சூர்யாவும் நான் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அதனால் தான் நடித்தேன். ஆனால் என்னையும் அவரையும் இணைத்து பேசினார்கள்.

இது பற்றி எஸ் ஜே சூர்யா என்னிடம் பேசினார், “இத்தனை ஆண்டுகளாக மண்ணுக்குள்ள புதைஞ்சு கிடந்து இப்போதான் எழுந்து வரேன். மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களா” என்று நகைச்சுவையாக பேசியதாக பிரியா பவானி ஷங்கர்.