திருமணத்திற்கு முன்பே மணக்கோலத்தில் ஊர்வலம் சென்ற நாக சைதன்யா.. லீக்கான வீடியோ!!

143

நாக சைதன்யா – சோபிதா..

சில நாட்களாக தென்னிந்தியாவை தாண்டி வட இந்திய திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு என்றால் நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் நிச்சயத்தார்த்தம் தொடர்பான செய்திகள் தான். ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலை 9.42 மணிக்கு நிச்சயத்தார்த்தம் நடந்ததாக நாகர்ஜுனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

பலரும் இதற்கு வாழ்த்து கூறியதை அடுத்து அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை நினைவுப்படுத்தி பேசி வருகிறார்கள். இன்னும் திருமண தேதியை நாகர்ஜுனா குடும்பம் முடிவு செய்யவில்லையாம். இப்படியொரு சூழலில் இருக்க அவர்களது திருமணம் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருப்பதாக செய்திகள் சமீபத்தில் வெளியானது.

இதற்கிடையில் நாகர்ஜுனா ஒருசில சட்டச்சிக்கல் பிரச்சனைகளில் சந்துத்துள்ள திருமணம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாக சைதன்யா ரோல்ஸ் ராய்ஸ் காரில் மணமகன் போல் ஊர்வலம் சென்ற வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்த்து சிலர் திருமண ஊர்வலமா என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஹைதராபாத்தில் நடந்த Tasva கம்பெனியின் புதுக்கடை திருப்பி விழாவிற்கு நாக சைதன்யா சென்றுள்ளார் என்றும் அங்கு ஊர்வலமாக கூட்டிச்சென்ற வீடியோதான் அது என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)