அந்தமாதிரி படத்தில் நடித்ததைவிட அதை செஞ்சது என் தப்பு.. ஸ்வர்ணமால்யா ஓப்பன் டாக்!!

1587

ஸ்வர்ணமால்யா..

சன் தொலைக்காட்சியில் இளமை புதுமை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் நடிகை ஸ்வர்ணமால்யா. பல பிரபலங்களை பேட்டிகள் எடுத்து வந்த ஸ்வர்ணமால்யா மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே, ஷாலினியின் அக்காவாக நடித்திருப்பார்.

அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த அவர் நடனக்கலைஞராக ஈடுபட்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், மணிரத்னத்திடம் ஒரு படத்தில் நடித்ததால் அவரைபோல் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் சினிமாவைப் பற்றி தெரியாமல் எடுத்த ஒரு முடிவால் பல பிரச்சனைகள் எனக்கு வந்தது.

என்னிடம் ஒரு பட்த்தில் நடிக்க கேட்டு சரி என்று சொல்லிவிட்டேன். அந்த படத்தில் நான் 10 நிமிடங்கள் தான்ன் நடிக்கப்போகிறீர்கள் கெஸ்ட் ரோல் என்று சொன்னார்கள். நானும் ஓகே என்று சொல்லி இருந்தேன். ஆனால் அந்த படம் ஆபாச படம், அதில் நடிக்கக்கூடாது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை.

அந்த படம் டப்பிங் என்பதால் ஒரிஜினல் படத்தின் சிடியை என்னிடம் கொடுத்தும் அதை நான் பார்க்கவில்லை. என் காட்சி குறைவாக இருக்கிறதே, சொன்னதை செய்யப்போகிறோம் என்று நினைத்துவிட்டேன். அதன்பின் போட்டோஷூட் இரு மணிநேரம் நடந்தது. எனக்கு அது ஆபாச படம் என்று தெரியாது.

இதில் நடிக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்தபோது போட்டோஷூட் முடிந்துவிட்டது. பின் நான் காண்ட்ராக்ட் கேன்சல் செய்திருக்கலாம், ஆனால் அந்நேரத்தில் பெரியதாக தெரியவில்லை.

பின் ஆபாச படத்தில் நான் நடித்துவிட்டேன் என்று சிலர் விமர்சனங்கள் வந்தது. இது நான் தெரியாமல் செய்த தவறுதான் இதைவிட பெரிய தவறு என் வாழ்க்கையில் நான் செய்தது திருமணம்தான். அதோடு ஒப்பிடும் போது இதெல்லாம் எனக்கு சின்ன விஷயம்தான் என்று ஸ்வர்ணமால்யா ஓப்பனாக பேசியிருக்கிறார்.