ஆமா நான் கவினை தெரிஞ்சே சைட் அடிக்குறேன் : காதலை ஏற்றுக்கொண்ட லொஸ்லியா!!

960

காதலை ஏற்றுக்கொண்ட லொஸ்லியா

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா சென்ற பிறகு படு போராக சென்று கொண்டு இருந்தது. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் மதுமிதாவிற்கும் இடையே நிகழ்ச்சியில் சண்டையால் பிக் பாஸ் வீடே இரண்டாக ஆகி விட்டது. இதுநாள் வரை அமைதியாக இருந்த மது நேற்று ருத்ர தாண்டவம் ஆகிவிட்டார்.

இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் எப்படியோ இணையத்தில் தினமும் வெளியாகிவிடுகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், குறிப்பாக ஆரம்பத்தில் அபிராமியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட கவின் பின்னர் சாக்ஷியுடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்தார். இதனால் பார்வையாளர்களே மிகுந்த வெறுப்புள்ளாகினர். பின்னர் நெட்டிசன்ஸ் பலரும் பிளே பாய் கவின் என்று மோசமாக விமர்சித்தனர்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் மதுமிதா மற்றும் ரேஷ்மா இருவரும் லாஸ்லியாவை கவினுடன் இணைத்து கிண்டல் செய்கின்றனர்.

இதனால் லாஸ்லியா கவினுடன் சென்று பஞ்சாயத்து வைக்க, எப்போதும் லாஸ்லியாவிற்கு பரிந்து பேசும் கவின் ‘அந்த புள்ளை தான் வந்த முதல் நாளிலே சொல்லிடிச்சே’ என்று கூற, அதற்கு லாஸ்லியா முன்ன தெரியாமல் அடிச்ச, இப்போ தெரிந்தே சைட் அடிக்கிறேன் என்று கூறுகிறார்.

இதை வைத்து பார்க்கும் போது கவினின் அடுத்த ரூட் லொஸ்லியாவுடன் தான் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு லெஸ்லியா – கவின் ரொமான்ஸ் பிக்பாஸில் ஓடும்.