காதல் தோல்வியால் மன உளைச்சல் : வருங்கால கணவருக்கு நிபந்தனை போடும் ராஷ்மிகா!!

1168

ராஷ்மிகா

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ராஷ்மிகா. அந்தப்படம் மிகச் சிறப்பாக ஓடியதால் படத்தில் நடித்த ராஷிமிகாவும் பிரபல ஆனார்.


அதன் பின், தற்போது, அவர், அதே விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் இணைந்து, டியர் காம்ரேட் படத்தில் நடித்திருக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் இன்று வெளியாகிறது.

இந்நிலையில், பிரபல ஊடகம் ஒன்றுக்கு நடிகை ராஷ்மிகா பேட்டி அளித்துள்ளார். அதில், தன்னுடைய கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் கூறியிருக்கிறார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது, எனது வருங்காலக் கணவர் எப்போதும் உண்மையைப் பேசுபவராக இருக்க வேண்டும். இனியாகவும் பேச வேண்டும். என்னுடைய உணர்வுகளை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அவருடைய உணர்வுகளை புரிந்து கொண்டு கட்டாயம், அவர் சொல்படி நடப்பேன். என்னுடன், அவர் அதிக நேரம் செலவிட வேண்டும். மற்றபடி, ஒருவரை மற்றொருவர் புரிந்து கொண்டாலே போதும்; சண்டை-சச்சரவுகள் இருக்காது. இருவருக்குமான வயது வித்தியாசம், ஒரு பொருட்டே அல்ல. இவ்வாறு ராஷ்மிகா மந்தனா கூறியிருக்கிறார்.

முன்னதாக, தன்னுடன் நடித்த ரக்ஷித் ஷெட்டி என்பவரை, நடிகை ராஷ்மிக மந்தனா காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, 2017ல், நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த காதல் தோல்வியைத் தொடர்ந்துதான், தனக்கு வரும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம், ராஷ்மிகா நிபந்தனை விதிக்கத் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.