நயன்தாராவுக்கு மட்டும் 6 கோடி சம்பளம் தரும் பொது எனக்கு ஏன் தரக்கூடாது? தயாரிப்பாளரிடம் கடுப்பான முன்னணி நடிகை !

610

நடிகை நயன்தாரா…

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டாராகாவும் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் தமிழில் நடிக்கும் படங்களுக்கு சுமார் ரு. 3 கோடி முதல் ரு. 4 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம் நடிகை நயன்தாரா.ஆனால் தெலுங்கு திரையுலகில் நடிக்கும் படங்களுக்கு சுமார் ரு. 6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம் நயன்தாரா என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இதே போல் நடிகை சமந்தாவும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு திரையுலக மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர்.

சமீபத்தில் இவர் புதிதாக தெலுங்கில் நடிக்க இருக்கும் புதிய படத்திற்க்கு ரு.3 கோடி வரை சம்பளம் வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்.

ஆனால் அதனை மறுத்த தயாரிப்பாளர் சமந்தாவின் அந்த சம்பளத்திற்கு பிடி கொடுத்த பேசவில்லையாம்.இதனால் உடனடியாக கடுப்பான சமந்தா நயன்தாராவிற்கு மட்டும் 6 கோடி சம்பளம் தரும் பொழுது, ஏன் எனக்கு 3 கோடி தர கூடாது என கேட்டுள்ளார்.

இதன் காரணமாக எந்த வித பதிலும் கூறாமல் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாராம் அந்த தயாரிப்பாளர்.இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை, இதற்கான காரணங்களுடன் உண்மையான தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.