நடிகை சங்கீதா..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, கோலமாவு கோகிலா, டாக்டர், டான், அண்ணாத்த, பத்து தல, ஜெய்லர், மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம்தேதி சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்தை பலர் விமர்சித்தாலும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையையும் கேரியரிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது பல சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வரும் சங்கீதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார். சமீபத்தில் பீச்சில் எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.