கணவருடன் ரொமான்ஸ் செய்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்த நயன்தாரா!!

616

நயன்தாரா..

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்து வரும் நயன் தாரா, தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக் நடித்து வருகிறார். கடந்த 2022ல் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து அதே ஆண்டில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.

படங்களில் நடித்தும் கிடைக்கும் நேரத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் விக்னேஷ் சிவன் தன்னுடைய 39வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அதற்கு நயன் தாரா நண்பர்களுடன் இணைந்து கணவர் விக்னேஷ் சிவனுக்கு கேக் வெட்டி கொண்டாடினார். தற்போது கணவருடன் வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்றுள்ளார்.

அங்கு கணவருடன் ரொமான்ஸ் செய்த ரொமாண்டிக் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை நயன் தாரா.