மரண மாஸ் சும்மா செய்றோம்- வலிமை படத்தின் இசை குறித்து மனம் திறந்து யுவன் சங்கர் ராஜா..!

80

வலிமை படத்தின் இசை குறித்து மனம் திறந்து யுவன்…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தல அஜித் குமார்.

இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடித்து வரும் படம் வலிமை.

இப்படத்தை கூட நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.

கொரோனா தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் கிழ் முறையான நடைமுறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வலிமை படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் வலிமை படம் குறித்து மனம் திறந்து பேசிய போது ” படத்தில் இசை மாசாக இருக்கும் சும்மா சிறப்ப செய்றோம் ” என செம்ம மாஸாக கூறியுள்ளார்.

தல அஜித்தின் நடிப்பில் யுவனின் இசையின் பிஜி எம் வந்தால் தியேட்டர் அதிரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.