சூர்யா படத்தை பார்த்து பயந்துபோய் தனுஷ் செய்த வேலை.. செம கடுப்பில் தயாரிப்பாளர்..!

120

பயந்துபோய் தனுஷ் செய்த வேலை…

சூர்யாவின் சூரரைப்போற்று படம் தான் தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பேச்சாக இருக்கிறது. அமேசான் தளத்தில் அந்த படம் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தியேட்டர்காரர்கள் பெரிதும் எதிர்பார்த்த சூரரைப்போற்று படம் அமேசான் தளத்திற்கு விற்கப்பட்டதால் அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து விலை பேசப்பட்டு வருகிறது.

அதில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படமும் அடிபடுகிறது. ஆனால் ஏற்கனவே நடந்த முடிந்த பட வியாபாரத்தை தனுஷ் தலையிட்டு தடுத்து நிறுத்தி விட்டாராம். இதனால் தயாரிப்பாளர் அவர் மீது கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். மதுரையிலிருந்து போகும் ஒரு சின்ன ரவுடி எப்படி வெளிநாட்டில் பெரிய கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதுதான் கதை.

சமீபத்தில் ஜகமே தந்திரம் படத்திலிருந்து ரகிட ரகிட என்ற பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜகமே தந்திரம் படத்தை வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளையும் முடித்து விட்டாராம் தயாரிப்பாளர் சசி.

ஆனால் சூர்யா படத்திற்கு வந்த எதிர்ப்பை பார்த்து பயந்துபோன தனுஷ் அவசரப்பட்டு படத்தை OTTக்கு கொடுக்க வேண்டாம் என தெரிவித்து விட்டாராம். நல்ல லாபத்திற்கு வைக்கப்பட்ட படத்தை தடுத்து நிறுத்தியதால் தனுஷ் மீது கடும் அப்செட்டில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.