நீச்சல் குளத்தில் குளித்தபடி புகைப்படங்களை வெளியிட்ட சஞ்சனா நடராஜன்!!

1238

சஞ்சனா நடராஜன்..

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில்

கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன். இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படம் கொடுத்த வரவேற்பால் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளை கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து டியர் ஃபிரண்ட்ஸ் என்ற மலையாள படத்திலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா, நீச்சல் குளத்தில் குளித்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.