கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம்!!

394

ரம்யா பாண்டியன்..

தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். பின் ஜோக்கர், ஆண் தேவதை படங்கள் நடிக்க இரண்டு படங்களும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

தமிழை தாண்டி மலையாளத்திலும் படம் நடித்துள்ள ரம்யா பாண்டியன் தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார், முகிலன் என்ற வெப் தொடரிலும் நடிக்கிறார். சின்னத்திரையில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.

நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளரான லவ்ல் தவானுக்கும் ரிஷிகேஷில் உள்ள ஷிவ்புரியில் கங்கை நதி கரையில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது புதிய ஜோடியின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.