நடிகரின் பிறந்தநாள் கொண்டாட கட்-அவுட் வைக்க சென்ற ரசிகர்கள் மரணம்- அதிர்ச்சி சம்பவம்..!

76

கட்-அவுட் வைக்க சென்ற ரசிகர்கள் மரணம்…

இன்று தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் பிறந்தநாள்.

இதனை கொண்டாட ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் பவன் கல்யாணின் வீட்டின் முன் ப்ளக்ஸ் வைக்க சோக சேகர், அருணாச்சலம் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 3 ரசிகர்கள் ஏறியுள்ளனர்.

25 அடி உயர பிளக்சை கட்டும் பணியின் போது, மின் கம்பிகள் மீது உரசியுள்ளது.

மின்சாரம் தாக்கியதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் 3 பேர் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதோடு பவன் கல்யாணும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும் வழக்குவதாக கூறியுள்ளார்.