“விஜய்யை இயக்க காத்திருக்கிறேன்” – அனல் பறக்கவிட்ட வெற்றிமாறன் !

67

அனல் பறக்கவிட்ட வெற்றிமாறன்…

“என்னிடமிருந்து புறப்படும் விதைகள் வீரியமானவை” என்று ‘மூன்றாம் பிறை’ பாலுமகேந்திரா தனது உதவி இயக்குனர்கள் பற்றி இப்படிச் சொல்வார்.

அந்த வார்த்தைகளை இன்றளவும் அழுத்தமாக நிரூபிக்கிற ஒருவர் வெற்றிமாறன். பாலு மகேந்திராவின் உதவியாளர்களில் தனித்துவம் மிக்கவர். “இனிமே உங்ககிட்ட வேலை செய்யமாட்டேன்., நீங்க ஒரே

மாதிரி படம் பண்றீங்க” என்று தன்னிடம் ஒரு சின்னப் பையன் கோபித்துக்கொண்டு போய்விட்டதாக, ஒருமுறை பாலுமகேந்திரா தன் நண்பரிடம் கூறி கண்கலங்கி வருந்தினார். அவர் சொன்ன சின்னப்பையன் தான் இந்த வெற்றிமாறன்.

இவர் சமீபத்தில் இயக்கிய, தனுஷ், மஞ்சு வாரியர், டீஜே அருணாச்சலம், பசுபதி, கென் கருணாஸ் உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அசுரன்.

தற்போது சூரி மற்றும் சூர்யாவை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்க உள்ளார், இந்தநிலையில் சமீபத்தில் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,

” விஜய்யை இயக்க காத்திருக்கிறேன், அவருடைய அழைப்புக்காக ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு இனிப்பாக அமைந்துள்ளது.