பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உண்மையில் ஏன் வந்தேன் : அழுதுபடி போட்டியாளர்களிடம் கூறிய சேரன்!!

893

சேரன்

பிக்பாஸ் வீட்டில் மீரா-சேரன் விவகாரம் தான் இப்போது மிகப் பெரிய டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. விளையாட்டாக செய்ததை மீரா இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்து ஊதி பெரிதாக்கி அவரை அசிங்கப்படுத்திவிட்டார்.

இதனால் ஒரு கட்டத்தில் சேரன் இதற்கு மேல் இருந்தால் என்னுடைய மரியாதை, மதிப்பு, நான் ஒரு பத்து படங்கள் எடுத்துள்ளேன். பெண்கள் என்னை ஒரு நல்ல டைரக்டராக நினைக்கிறார்கள், ஆனால் இந்த பெண்ணோ என்னை தவறாக சித்தரிக்க நினைக்கிறாள்.

நான் உண்மையாக பிக்பாஸ் வருவதற்கு காரணமே என் மகள்கள் தான், அவள்களுக்காத தான் நான் இந்த வீட்டிற்குள்ளையே வந்தான், இல்லையென்றால் நான் ஏன் வரப்போகிறேன், எனக்கு எல்லாம் என் மகள் தான், இதைக் கண்டால் இந்த சோசைட்டி என்னை என்ன நினைக்கும் என்று கண்ணீர் விட்டு அழுதார்.

இதற்கு முன்பு சமீபத்திரக்கனி அளித்த பேட்டி ஒன்றில், சேரன் ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார் என்று கேட்ட போது, அவர் இன்றைய தலைமுறை, இப்போது எப்படி இருக்கிறார்கள், அவர்களுக்கு பிடித்தது என்ன? எது போன்று இருக்க வேண்டும் போன்ற பல புதியதை தெரிந்து கொள்வதற்காக சென்றுள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.