கவீன்
பிக்பாஸ் விட்டில் நேற்று நாட்டாமை டாஸ்க்கில் யார் நன்றாக செய்தார்கள் என்று 2 பேரை தேர்வு செய்ய வேண்டும் எனவும், அப்படி தேர்வு செய்யப்படும் 2 பேர் தலைவர் பதவிக்கும் நிற்கப்படுவர் என்றும், நன்றாக டாஸ்க் செய்யாத 2 பேர் சிறையில் அடைக்கப்படுவர் எனவும் பிக்பாஸ் கூறினார்.
அதன் படி நாட்டாமை டாஸ்க் நன்றாக செய்தவர்கள் மீரா, ஷெரீன் தான் என்று சிலர் கூற, உடனே அங்கிருந்த மதுமிதா, சேரன், ஷாக்சி போன்றோர் அப்போ நாங்கள் எல்லாம் சரியாக பண்ணவில்லையா என்று கோபப்பட்டனர்.
அதில் ஒரு கட்டத்தில் கவீன், ஷாக்சியிடம் மொழிப்பிரச்சனை இருந்தது என்று கூறியதால், அவரிடம் வந்து ஷாக்சி நான் என்ன சுவாரஸ்யமாக டாஸ்க்கை செய்யவில்லை என்று திரும்ப… திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் கவீனோ நான் சுவாரஸ்யத்தைப் பற்றி பேசவில்லை, மொழிப்பிரச்சனையை பற்றி அதாவது கிராமத்து மொழி போன்று பேசவில்லை என்று விளக்கினார்.
ஆனால் ஷாக்சி மீண்டும்…மீண்டும் அதைப் பற்றியே கேட்டதால், ஒரு கட்டத்தில் கோபமடைந்த கவீன், அடிச்சு சாவடிச்சுருவேன் டி என்று கை நீட்ட ஷாகி அழுது கொண்டே அங்கு பலர் இருக்கும் போது இவன் ஏன் இப்படி கூறினான் என்று கதறி அழுதார்.