வேற லெவல் சாதனை! Youtube ல் மாஸ் காட்டிய பிரபல நடிகர்!

59

அல்லு அர்ஜூன்…

தெலுங்கு சினிமா நடிகர்களுக்கும் நம் தமிழ் நாட்டில் பெருமளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் நடிகர் அல்லு அர்ஜூன்.

அவரின் படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வசூல் சாதனை செய்து வருகிறது. அவ்வகையில் கடைசியாக அவரின் நடிப்பில் வெளியான அல வைகுந்த புரமுலு படம் உலகளவில் ரூ 150 கோடி வசூலித்தது.

பாகுபலி சாதனை அல்லாத மற்ற படங்களுக்கான லிஸ்டில் இப்படம் முக்கிய இடத்தையும் பிடித்தது. அதிலும் புட்ட பொம்மா பாடல் Youtube மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று பலரையும் கவர்ந்தது.

இந்நிலையில் அப்படத்தின் மற்றொரு பாடலான Ramulo Ramula 300 மில்லியன் பார்வைகளை பெற்று தென்னிந்தியாவில் முதலிடம் பிடித்து ரெக்கார்டு சாதனை செய்துள்ளது.