கடைசியாக எடுக்கப்பட்ட படம்! பிரம்மாண்ட படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சோதனை!!

68

பிரம்மாண்ட படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சோதனை…

தமிழ் சினிமா முற்றிலும் புது வடிவம் கண்டு வருகிறது என கூறலாம். முந்தைய காலங்களில் தென்னிந்திய சினிமா படங்கள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டியோக்களில் எடுக்கப்பட்டு வந்தன.

அதில் ஒன்று ஏ.வி.எம். படங்களின் தொடங்கத்தில் அந்நிறுவன லோகோவுடன் ஒருவித இசையும் தோன்றியதை இன்னும் நம்மில் பலராலும் மறக்கமுடியாது தானே.

ஆனால் சினிமா கதைக்களங்களை நோக்கி படையெடுக்க தொடங்கிய போது படப்பிடிப்புகள் குறைந்து போய் பல ஸ்டூடியோக்கள் மூடப்பட்டது. ஆனால் கடைசி வரை நிலைத்து நின்றது ஏ.வி.எம் மட்டுமே.

அந்த பிரம்மாண்ட இடத்தில் அடுக்கு மாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனை என உருவாக்கப்பட்டது.

அண்மையில் ஏ.வி.எம்.ராஜேஸ்வரி தியேட்டரும் மூடப்பட்டது. அங்கு ஷாப்பிங் மால் கட்டப்பட்டு வருகின்றன. அங்கிருந்த கார்டனில் தான் மண்டபம், டப்பிங் தியேட்டர், பங்களா அமைந்துள்ளது.

1000 க்கணக்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த வேளையில் அனைத்தும் குறைந்து போக தற்போது ஏ.வி.எம்.கார்டனை திருமண மண்டபமாக மாற்றுகிறார்களாம்.

இவ்விடத்தில் தான் யோகிபாபு நடித்த மண்டேலா படத்தின் படபிடிப்பு கடைசியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.