மது போதைக்கு அடியானாரா சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரகதி! அதிரடியான பதிவு..!

143

பாடகி பிரகதி…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாடகி பிரகதி. கடந்த 2012 ல் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் இரண்டு பாடல்களை பாடியிருந்தார்.

ராட்சசன், கண்ணே கலைமானே படங்களிலும் பாடியுள்ளார். இந்நிலையில் பிரகதி மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக செய்திகள் வலம் வந்தன.

இதுகுறித்து பிரகதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அயர்லாந்து நாட்டில் கின்னாஸ் ஃபாக்டரிக்கும் சென்றிருந்த போது ஒரு பீர் கிளாஸுடன் புகைப்படம் எடுத்ததை வைத்து நான் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபோல செய்திகளை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சொல்கிறார்கள். ஆனால் அந்தளவிற்கு அவற்றுக்கு மதிப்பு கிடையாது. என்னுடைய, உங்களுடைய நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.