ஜி.வி.பிரகாஷின் அடுத்த சாதனை! பலரையும் கவர்ந்த வீடியோ! முக்கிய நடிகரின் மேஜிக்..!

74

ஜி.வி.பிரகாஷ்…

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தன் இசை திறமையால் பல பாடல்கள் ஹிட் கொடுத்து பலரின் மனதை கொள்ளையடித்தவர். கடந்த சில வருடமாக நடிகராக தொடர்ந்து தன் பரிமாணத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கடைசியாக அவர் நடிப்பில் வந்த சிவப்பு மஞ்சள் பஞ்சை படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கையில் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4G, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் என பல பட வாய்ப்புகள் வைத்துள்ளார்.

இதில் வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க அபர்னதி ஜோடியாக, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர் என பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் நடிகர் தனுஷ் பாடியுள்ள காத்தோடு காத்தானேன் பாடல் ஜூன் 15 ல்வெளியானது.

அப்பாடல் தற்போது 8 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.