All in All புதுமுகங்கள் நடித்திருக்கும் கோலிவுட் திரைப்படம் !

541

கநாதன்………

பொதுவாக ஒரு வருடத்தில் 200 சொச்சம் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும், அதில் வெறும் 20 படங்கள் மட்டுமே வெற்றி அடையும், அதில் இரண்டு படங்கள் நமக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் நடித்த படங்களாக இருக்கும்.

இந்த நிலையில், Triangle 369 மற்றும் பால்ராஜ் கிரியேஷன்ஸ் இணைத்து தயாரித்துள்ள திரைப்படம் கநாதன்.

இதில் நடித்த அனைவருமே புதுமுகங்கள், கதாநாயகனாக லீ போல்ட் நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருதி ஜெ .பிரகாஷ் அறிமுகமாகிறார்.

இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் அமைத்து கொடுத்துள்ளார் இசை அமைப்பாளர். தமிழ் நாடு, கேரளா,கர்நாடகா போன்ற மாநிலங்களில் படமாக்கப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாக தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீடு கோயம்புத்தூரில் மிக சிறப்பாக நடைபெற்றது என்பது கூடுதல் தகவல்