சூர்யாவை உயரமாக காட்ட இந்த ட்ரிக்கை யூஸ் பண்ணினோம் – 17 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த இயக்குனர்!!

66

சூர்யா…

காக்க காக்க படத்திற்கு முன், சூர்யாவின் படங்கள் சிலது விமர்சன ரீதியாக வெற்றி அடைந்தாலும், எந்த படமும் வசூலில் ஜெயிக்கவில்லை.

சூர்யாவின் முதல் வசூல் ரீதியான வெற்றி படம் என்றால் அது காக்க காக்க படம்தான். அந்த படம் அஜித் மற்றும் விக்ரம் போன்றவர்கள் நடிக்க வேண்டிய படம்.

இந்த படத்துக்கு பிறகுதான் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது என்று இண்டஸ்ட்ரியில் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து அதன் இயக்குனர் கௌதம் மேனன் ஆன்லைன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது படத்தைப் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட கௌதம், படத்தில் சூர்யாவை உயரமானவராக காண்பிக்க பல ஷாட்களை லோ ஆங்கிளில் படம்பிடித்ததாக சொல்லியுள்ளார்.