மீரா ஒரு சைக்கோ : அன்று எனக்கு நடந்த அநியாயம் : ஒட்டுமொத்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர்!!

1263

மீரா மிதுன்

பிக்பாஸில் தற்போது மக்கள் அதிகமாக வெறுக்கப்படும் போட்டியாளர் என்றால் மீரா மிதுன் என்றே கூறலாம். இந்த வாரம் இவர் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டார்.

தற்போது மீரா மிதுனைக் குறித்து ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் அவருடன் நடனமாடிய சைப் அலி கான் பல உண்மைகளை கூறியுள்ளார். மீரா மிதுன் ஒரு சைக்கோ என்று கூறியுள்ள அவர், தற்போது சேரன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை என் மீது வைத்ததை ஜோடி ப்ரொமோ காட்சியில் அவதானித்திருப்பீர்கள்.

அதுமட்டுமின்றி அத்தருணத்தில் நான் தான் தவறு செய்துவிட்டேனோ என்று தோன்றும் அளவிற்கு அவரது குற்றச்சாட்டு இருந்தது. மீரா இன்னும் இரண்டு வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தால் கமல் சாரே இந்நிகழ்ச்சியை விட்டு கட்டாயம் வெளியே வந்துவிடுவார் என்றும் அவ்வாறு வந்ததும் எனது வீட்டிற்கு வந்து எப்படிடா அந்த பெண்ணுடன் நடனமாடின என்று கட்டாயம் கேட்பார்.

மேலும் 15 பேர் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை சமாளிக்க முடியாமல் தவிக்கும் இத்தருணத்தில் நான் ஒற்றை ஆளாக இருந்து சமாளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் சேரனைக் குறித்து பேசுகையில், இப்படியொரு நபரை குற்றம் சொல்வதற்கு எப்படி மனது வருகின்றது. அவருடன் வேலை செய்வதற்கு பல பிரபலங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

மீரா மிதுனின் உண்மையான பெயர் தமிழ்செல்வி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவருக்கு கொடுக்கப்படும் செக் கூட அந்த பெயரிலேயே தான் செல்லும் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.