இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2 படத்தின் தலைப்பு இதுதான்..!

124

இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2…

சந்தோஷ் பி.ஜெயக்குமார் என்பவறின் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி ஆகியோர் இணைந்து நடிக்க 2018ம் வெளியாகிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

அடல்ட் காமெடி ஹாரர் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம், இளைஞர்கள் மத்தியில் மட்டும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சந்தோஷ் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து 2ம் பாகம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘இரண்டாம் குத்து’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். பிக்பாஸ் டேனியல், சாம்ஸ், ஷாலு ஷம்மு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.