லாஸ்லியாவின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய கவீன் : செம காண்டான ஷாக்சி!!

1269

லாஸ்லியா- கவீன்

பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைத்து பெண்களிடமும் பழகி காதல் மன்னனாக வலம் வந்த கவீன், அதன் பின் ஷாக்சியிடம் நெருங்கி பழகியதால், அந்த பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமானார்.

பாத்ரூமுக்குள் சென்று கதறி அழுதார். ஆனால் ஷாக்சியோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். இருப்பினும் கவீன் ஷாக்சியிடம் நடந்து கொண்ட விதத்தை எல்லாம் மறந்து லாஸ்லியாவிடம் ஜாலியாக பேசி வருகிறார். இதைக் கூட ரேஷ்மா சமீபத்தில் எபிசோடில் ஷாக்சியிடம் கூறினார்.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சிறைக்குள் இருக்கும் அபிராமி பிக்பாஸிடம் நாங்கள் செய்தது தவறு தான் என்று கூறிக் கொண்டிருக்க, அப்போது அருகில் இருந்த லாஸ்லியாவிடம் கவீன், கையை பிடிப்பது கன்னத்தை பிடித்து கொஞ்சுவது போன்று இருக்கிறார்.

அப்போது அங்கிருந்த ஷாக்சி கவீன் மற்றும் லாஸ்லியாவை செம கோபத்தில் பார்க்கிறார். இதனால் இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் அது எப்படியோ கவீனுக்கு ஷாக்சி இல்லைனா? லாஸ்லியா? என்று ஜாலியாக இருக்கிறான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.