பிக்பாஸிலிருந்து வெளியேறிய மீரா இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? செமையாய் கலாய்த்த சாண்டியின் முன்னாள் மனைவி!!

1099

வெளியேறிய மீரா மிதுன்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் குறித்து சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி பேசியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் சேரன் தன்னை தவறாக தொட்டார் என கூறினார் மீரா.

ஆனால் கமல்ஹாசன் காட்டிய குறும்படத்தில் அவர் முகத்திரை கிழிந்தது. இந்நிலையில் நேற்று மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் சேரனுக்கு எதிராக பொய் புகார் கூறியதால் மீராவுக்கு எதிராக மக்கள் ஓட்டு போட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ரகசிய அறைக்குள் மீரா செல்வாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இது குறித்து டுவிட்டரில் சாண்டியின் முன்னாள் மனைவி காஜல், சீக்ரட் அறையை ஆரம்பத்திலேயே காட்டிவிட்டதால் அந்த ஆப்ஷனை இந்த வாரம் காட்ட மாட்டங்கன்னு நினைக்கிறேன் என கூறினார்.

அதற்கு ரசிகர் ஒருவர், ஆனால் நீங்கள் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கூற அதற்கு காஜல், பொருத்திருந்து பார்ப்போம், மீரா நாம் இப்போது போடும் டுவீட்களை கூட பார்த்து கொண்டிருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

அதாவது அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி தன்னை பற்றி மக்கள் என்ன பேசி கொள்கிறார்கள் என டுவிட்டரில் பார்த்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.