துளி கூட மேக்கப் இல்லாமல் வந்த தமன்னா.. அதிர்ச்சியான ரசிகர்கள்!!

3727

தமன்னா..

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா. நடிப்பு மட்டுமின்றி தற்போது நடனத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கேஜிஎப், ஜெயிலர், ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு நடனமாடி மாஸ் காட்டி வருகிறார். இவருடைய நடனம் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா, விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தமன்னா மும்பையில் கருப்பு நிற உடையில் துளி கூட மேக்கப் இல்லாமல் மிகவும் எளிமையாக ஷாப்பிங் சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேக்கப் போடாவிட்டாலும் தமன்னா அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர்.