சுஷாந்த் சிங் மரணத்தில் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை! சர்ச்சையான பதிவால் ரசிகர்கள் காட்டம்..!

56

சுஷாந்த் சிங் ராஜ்புட்…

கடந்த ஜூன் மாதம் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் அவரின் காதலி ரியா மற்றும் அவரின் சகோதரர் கைது செய்யப்பட்டனர். ரியா மீது பல்வேறு குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதை பொருள் கடத்தல், சுஷாந்த்துக்கு தெரியாமல் போதை பொருளை தேனீரில் கலந்து கொடுத்தார் எனவும் சொல்லப்பட்டுவருகிறது.

இதுகுறித்து திரையுலகை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை டாப்சி இந்நேரம் சுஷாந்த் சிங் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் சிறையில் இருந்திருப்பார் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

இதனால் சுஷாந்த் ரசிகர்கள் டாப்சியின் மீது கோபத்தில் உள்ளனர்.