திவ்யதர்ஷினி..
தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அவ்வளவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை.
ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் திவ்யதர்ஷினி சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, டிடி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ. 4 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ. 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் சினிமாவை தாண்டி தனியாக சொந்த தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.