மீரா மிதுன்
மீரா மிதுன் குறித்து யாருக்கும் தெரியாத பல திடுக்கிடும் தகவல்களை அவரின் முன்னாள் தோழி நிஷா ஷெரீப் பகிர்ந்து கொண்டுள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மீரா யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்க மாட்டார். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என இருப்பார்.
அவளுக்காக இரண்டு முறை பேஷன் ஷோ செய்து கொடுத்தேன், ஆனால் அதற்கு பணம் கொடுக்காமல் அவர் என்னை ஏமாற்றிவிட்டார், இதன்பின்னர் அவருக்காக நான் ஷோ நடத்தவில்லை.
பின்னர் என்னை பற்றி மற்றவர்களிடம் அவர் தவறாக பேசினார் என்பதை என் நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன். இதிலிருந்து அவருடன் பேசுவதை விட்டு விட்டேன், அவரே போன் செய்தால் பேசுவேன்.
இன்ஸ்டாகிராமில் ஒருவர் எனக்கு மெசேஜ் அனுப்பினார், மீரா மிதுனுடன் நான் வெளியில் சென்றேன், என்னிடம் அவர் பத்தாயிரம் ரூபாய் வாங்கி கொண்டு ஏமாற்றிவிட்டார் என கூறினார்.
அவளால் வாழ்க்கையில் ஏமாந்து பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள். நண்பர்கள் உறவினர்கள் என பலரை அவர் ஏமாற்றியுள்ளார் என கூறியுள்ளார்.