உதவி கேட்ட ரேஷ்மா
பிக்பாஸ் வீட்டில் நேற்று ஓபன் நாமினேஷன் நடந்தது. இந்த ஓபன் நாமினேஷனில் மதுமிதா, கவீன், ஷாக்சி, அபிராமி, ரேஷ்மா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். அதன் பின் கவீனை நாமினேட் செய்த ரேஷ்மா, கிட்சனில் இருந்த போது, கவீனை கட்டிப்பிடித்து, தோளில் சாய்ந்து அவரிடம் ஒரு உதவி கேட்டார்.
அப்போது ரேஷ்மா, நான் இந்த வாரம் வெளியேறிவிட்டால், என் குழந்தைகளுக்கு பணம் கட்டிவிடுடா என்று கேட்டார். அதற்கு கவீன் அதெல்லாம் ஒன்னும் இல்லைடா கண்டிப்பா என்று கூறினார்.
அதன் பின் மீண்டும் ரேஷ்மா மன்னிப்பு கேடக, ஆனால் கவீனோ நான் அதற்காக டல்லாக இல்லை, எல்லா விஷயமும் தெரிந்தும், ஷாக்சி என்னை நாமினேட் செய்தது தான் ஒரு மாதிரி இருக்கிறது என்று கூறினார்.