சேரன் இப்படிப்பட்டவரா? வெளியே வந்த மீராவின் முதல் பேட்டி!!

1075

மீராவின் முதல் பேட்டி

பிக்பாஸ் வீட்டில் சேரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால், மக்களிடம் மோசமான விமர்சனங்களை பெற்ற மீரா மிதுன், கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட சில மணி நேரங்களிலே கவர்ச்சி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, வைரலாக்கினார்.

இந்நிலையில் அவர் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு முதல் முறையாக பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவருடன் முதலில் கேட்ட கேள்வியே சேரன் பிரச்சனை தான், அதற்கு மீரா, அவர் என்னை பிடித்த விதம் ஹார்ஷாக இருந்தது, அதன் காரணமாகவே அப்படி கூறினேன்.

அப்புறம் ஏன் சிரீத்து கொண்டே வந்தீர்கள் என்ற போது, நான் பொதுவாகவே எந்த ஒரு விஷயத்தையும் முகத்தில் காட்டமாட்டேன், அதனாலே தான் சிரித்தேன்.

அதுமட்டுமின்றி அந்த விஷயத்தை சேரன் வேறு ஒரு மாதிரி கொண்டு சென்றுவிட்டார். அது எப்படி சொல்வது சென்சிடிவ்வாகவே கொண்டு சென்றுவிட்டார், இதனாலே போட்டியாளர்கள் அவரிடம் சென்று பேசினர்.

என்னை பொறுத்தவரை அவர் ஒரு நாடகத்தை போட்டு, அப்படியே மாற்றிவிட்டார் என்று தான் கூறுவேன், ஒரு வேளை அவருக்கு அது உண்மையாக கூட வலித்திருக்கலாம், ஆனால் என்னுடைய கருத்து இது தான்.

கடைசியில் ஏன் சேரனை அந்த வார்த்தை ஜெயிச்சீட்டேங்க வாழ்த்துக்கள் என்று கூறினீர்கள், என்ற போது பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது சும்மா டயலாக் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, சேரன் சார் தான்,

இந்த வீட்ல எனக்கு முன்னாடி வெளியே அனுப்புவேன் என்று அண்ணாமலை டயலாக் போன்று செய்து காட்டினார். அதன் காரணமாகவே வெளியேறும் போது, நீங்கள் ஜெயிச்சுட்டேங்க சார் என்று அவரிடம் கூறினேன் என்று முடித்தார்.