காதலன் விக்னேஷ் சிவன் பிறந்தநாளில், இருவரும் இணைந்திருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை வெளிட்ட நடிகை நயன்தாரா..!

55

நடிகை நயன்தாரா…

கடந்த 15 வருடமாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா.

இவரின் நடிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

சமீபத்தில் தனது அம்மாவின் பிறந்தநாளை தன் காதலன், இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடி வந்தார்.

அந்த புகைப்படங்களை கூட தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் என்பதால், மிகவும் அழகான ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் விக்னேஷ் சிவனின் டி- ஷர்ட்டில் ” குட் டைம் ஆல்வேஸ் ” என பதிவிட்டுள்ளார் நயன்தாரா.