மாடர்ன் உடையில் நிகழ்ச்சிக்கு வந்த ராஜலட்சுமி..! காதலை சொன்ன முன்னாள் சூப்பர் சிங்கர் ! வைரல் வீடியோ !

122

ராஜலட்சுமி….

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது.

குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான ராஜலட்சுமி தற்போது பிரபுதேவா படங்களில் ஆரம்பித்து அஜித் படமான விசுவாசம் படம் வரை பாடிவிட்டர்கள்.

வெளிநாடுகளில் கூட நாட்டுப்புற பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது குடும்பப்பாங்கான பிம்பத்தை உடைத்து தற்போது விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியில் பயங்கரமான மாடர்ன் உடையில் ராஜலட்சுமி வந்ததைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடுவர்கள் முன்னிலையில் சூப்பர் சிங்கரின் முன்னாள் பாடகர் சாய் சரண் அவர்கள், ராஜலஷ்மியை சுற்றி சுற்றி பாடல் பாடுவார்.

இதனை பார்த்த தொகுப்பாளினி ஒருவர் அவருக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சு என மொக்க ஜோக் அடித்திருப்பார்.

அதற்கு இவர் கட்டுன அவரே, சும்மா இருக்காரு உனக்கு என்ன என அவரை கலாய்த்து இருப்பார். இவ்வாறு இந்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.