நடிகை நமிதா
கவர்ச்சி நடிகை நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை, திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக அவர் நடிப்பில் வந்த படம் ‘பொட்டு’. அது பிளாப் ஆனது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அதன் பிறகு அவரை பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை. இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் சினிமாவை நடிக்க திரும்பியுள்ளார்.
இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்கும் படத்தில் தான் நமீதா நடிக்கவுள்ளார். அதில் அவருக்கு நெகடிவ் வேடம் என்று கூறப்படுகிறது.