பிக்பாஸ் சீசன் 4 : உறுதியான முதல் 7 போட்டியாளர்கள் பட்டியல் இதோ..!

133

பிக்பாஸ்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இப்போது கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியை சிம்பு, பார்த்திபன், அரவிந்த்சாமி தொகுத்து வழங்குவார்கள் என யூகிக்க பட்ட நிலையில், வழக்கம்போல் இந்த முறையும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்குவார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற போகிறவர்கள் யார் என்றால், ஷிவானி நாராயணன், பூனம் பஜ்வா, கிரண், சிவாங்கி, சூர்யாதேவி, சனம் ஷெட்டி,புகழ், ரம்யா பாண்டியன், அதுல்யா, மணிமேகலை, அனுமோகன், அம்ரிதா ஐயர் உள்ளிட்டோர் இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாகவும் கதகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது முதல் 7 போட்டியாளர்கள் யார் யார் என்ற விபரங்கள் நம்ப தகுந்த வட்டரங்களிடம் இருந்து நமக்கு கிடைத்துள்ளன.

அதன் படி, நடிகர்களின் ஜித்தன் ரமேஷ், காமெடி நடிகர் அணு மோகன், தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ராஜ், குட்டி பாபி சிம்ஹா என்று அறியப்படும் பாடகர் அஜீத் காலிக் ஆகியோரும். நடிகை, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், விஜய் டிவி கேப்ரில்லா ஆகியோரும் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.