நடிகை காஜல் அகர்வால் மீது மோகம் : கோடீஸ்வர இளைஞர் செய்த செயலால் நேர்ந்த விபரீதம்!!

1070

நேர்ந்த விபரீதம்

நடிகை காஜல் அகர்வால் மீதான மோகத்தால் 75 லட்சத்தை தமிழக இளைஞர் ஒருவர் இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரின் மகனான 27 வயது இளைஞர், சில மாதங்களுக்கு முன்னர் கணனியில் இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்த போது, சில பெண்களின் புகைப்படங்களுடன் விளம்பரம் தோன்றியுள்ளது.

விளம்பரத்தில், நடிகைகளின் ஆ பாச படங்கள் இருந்ததுடன், யாராவது விருப்பப்பட்டால் அந்த நடிகைகளை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கண்டதும் நடிகைகளை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அந்த விளம்பரத்தை கிளிக் செய்து, உள்ளே சென்றுள்ளார். மேலும், தனது தகவல்களையும் அதில் பதிவு செய்துள்ளார். அடுத்த நிமிடமே சில நடிகைகளின் படங்கள் தோன்றி, அவர்களில் யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க விரும்பிய அந்த இளைஞர், அந்த படத்தின் மீது ‘கிளிக்’ செய்துள்ளார். இதனை உறுதி செய்ய 50 ஆயிரம் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தகவல் வந்துள்ளது.

அதன்படி அந்த இளைஞன் மணிகண்டன் என்பவரது வங்கி கணக்கில் பணத்தினை செலுத்தி உள்ளார். சற்றுநேரத்தில் அவரின் செல்போன் எண்ணுக்கு உறுதிசெய்யப்பட்ட எஸ்.எம்.எஸ். வந்தது.

இதன் மூலம் நடிகை காஜல் அகர்வாலை சந்தித்து விடலாம் என்று இளைஞர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் இது பற்றிய தகவலை அப்போது அவர் யாரிடமும் கூறவில்லை என தெரிகிறது.


இதற்கிடையே இணையதளத்தில் பதிவு செய்த தகவலைக் கொண்டு அவரிடம் ரூ.50 ஆயிரத்தை கறந்தவர்கள் மேலும் பணத்தை பறிக்க அந்த இளைஞர் யார், அவரது பின்னணி என்ன? என்பது குறித்து ரகசியமாக விசாரித்துள்ளனர். அந்த இளைஞர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதையும் உறுதி செய்துள்ளனர்.

சில நாட்களில் மேலும் ஒரு வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் நடிகை காஜல் அகர்வாலை சொல்லும் இடத்திற்கு அழைத்து வந்து சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் அனுப்பி உள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் உஷாரான அந்த இளைஞர், இது ஏமாற்று வேலை என்று உணர்ந்து பணம் அனுப்ப முடியாது என மறுத்துள்ளார்.

அதற்கு பின்னர்தான் அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அடுத்த சிலநிமிடங்களில் அந்த இளைஞனின் செல்போன் எண்ணிற்கு அவரையும் சில பெண்கள் மற்றும் நடிகைகளை இணைத்து, மார்பிங் செய்யப்பட்ட ஆ பாச படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி உள்ளனர்.

உடனே அந்த இளைஞன் அந்த படங்களை அழித்து விடுமாறு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். தாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் அந்த ஆ பாச புகைப்படங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிவிடுவதுடன், சமூக வலைத்தளங்களிலும் பரவ விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

குடும்ப கவுரவத்தை கருத்தில் கொண்டு அந்த வாலிபர், அந்த மோசடி பேர்வழிகளின் வலையில் விழுந்துவிட்டார். வேறு வழியின்றி அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 3 தவணைகளாக 75 லட்சத்தை அனுப்பி உள்ளார்.

இந்த பணத்தை எடுத்துக்கொண்ட அவர்கள், அவர் பொன்முட்டையிடும் வாத்து என்று நினைத்து தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால், நடந்ததை வெளியே சொல்ல முடியாமல் அந்த இளைஞன் தொடர்ந்து மன அ ழுத்தத்துக்கு ஆளாகி உள்ளார்.

பின்னர் அவர் வாழப் பிடிக்காமலும் அவமானம் தாங்காமலும் கொல்கத்தா சென்று த ற்கொலை க்கு முயன்றார். இதனை அடுத்து தொழிலதிபர் அளித்த புகாரின்படி ராமநாதபுரம் தனிப்படை கொல்கத்தா சென்று தொழிலதிபரின் மகனை மீட்டுள்ளனர்.

பின்னர் மணிகண்டனை பிடித்து விசாரித்த போது சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் சரவணக்குமார் பட தயாரிப்பிற்காக சில நபர்கள் பணம் தருவார்கள் என்று சொல்லி எனது கணக்கில் பணத்தை பெற்று சென்றார் என கூறியுள்ளார்.

அதன் பேரில் சென்னையில் சரவணக்குமாரை கைது செய்து விசாரணை செய்ததில் நடிகை மோகம் காட்டி ராமநாதபுரம் தொழிவதிபர் மகனிடம் பெற்ற ரூ.75 லட்சத்தில் ரூ.68 லட்சத்தை உலக கோப்பை கிரிக்கெட் சூ தாட்டத்தில் இழந்தது தெரிய வந்தது.

எஞ்சிய தொகை சரவணக்குமாரின் வங்கிக் கணக்கில் இருந்துள்ளது. இதனை அடுத்து சரவணக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார், மேலும் இது தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை செய்து வருகின்றனர்.