கைது செய்யப்படுகிறாரா மீராமிதுன்? அதுவும் ஜாமீனில கூட வெளிய வர முடியாதாமே !

89

மீரா மிதுன்….

வனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான்.

இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது. Big Boss-இல் சேரன் மீது குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார். மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

தற்போது மீண்டும் கமல்ஹாசனையும், சேரனையும் வம்புக்கு இழுத்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் மீராமிதுன் தனது சமூக வலைத்தளத்தில் ஒட்டுமொத்த மலையாள மக்கள் மனம் புண்படும் வகையில் தெரிவித்த ஒரு கருத்துக்காக கேரள போலீசார் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில் மீராமிதுன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.