என் உயிரே போனாலும் அதை செய்யமாட்டேன்… பாத்ரூமிற்குள் கதறி அழுத லாஸ்லியா!!

1167

லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் நேற்று வெறும் கண்ணீராகவே இருந்தது என்று கூறலாம், விளையாட்டு வினையாகி போனது என்பது தான் உண்மை. கவீன் விளையாட்டுத்தனமாக அனைத்து பெண்களிடமும் பழக, அதன் பின் அது வேறு மாதிரி சென்று இப்போது, ஷாக்சி,கவீன், லாஸ்லியா என்று ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக வந்து நிற்கிறது.

அந்த வகையில் லாஸ்லியா எனக்கும், கவீனுக்கும் இருக்கும் உறவைப் பற்றி யாரிடமும் விளக்க வேண்டிய அவசியமில்ல, ஷாக்சி இப்படி துன்புறுவதற்கு நான் தான் காரணம் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறிவிட்டு பாத்ருமீற்குள் சென்று அழுதார்.

அப்போது அங்கு வந்த சேரன், ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்ட போது, லாஸ்லியா நீங்கள் என்னிடம் பேச வேண்டாம், நீங்கள் என் பக்கம் நிற்கவில்லை என்று கூறினார்.

உடனே சேரன் நான் அப்படியெல்லாம் கிடையாது, உன் பக்கம் இருக்கும் நியாத்தை நீ சொல், உன் மீது பழி வந்துவிடக்கூடாது என்பதற்காக நீ பேசு என்று தான் கூறினேன் தவறாக நினைத்துவிட்டாய்.

ஒன்றே ஒரு வாக்குறுதி மட்டும் கொடுக்கிறேன், என் உயிரே போனாலும் நான் உன் பக்கம் தான் நிற்பேன தவிர வேறு யாரு பக்கமும் நிற்கமாட்டேன் என்று கூறினார்.