கண்கலங்கிய சாண்டி
பிக்பாஸ் வீட்டில் மொட்ட கடிதாசி டாஸ்க்கில், சாண்டிக்கு வந்த கடிதத்தில், நீங்கள் நடனம், காமெடி என்று இருக்கிறீர்கள், உங்களுக்கு அன்பு, காதல் எதுவும் இல்லையா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு சாண்டி இப்படி ஒரு கேள்வி வந்ததால், என் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை பகிர்கிறேன், எனக்கு எல்லாம் இப்போது என் மனைவி என் குழந்தை என்று நான் கூறுகிறேன், ஆனால் முன்பெல்லாம் நான் இப்படி கிடையாது.
என் மனைவியை கண்டால் நான் கண்டு கொள்ளமாட்டேன், வீட்டில் எங்கள் அப்பா-அம்மாவிற்கு சண்டை நடந்தால் கூட, கொஞ்சம் தள்ளி போய் சண்ட போடுங்க என்று தான் சொல்வேன், என்னை பொறுத்தவரை நான் பிரியாக இருக்க மட்டுமே நினைப்பேன்.
அதே போன்று தான் என் மனைவி சின்ன சின்னதாக யாரிடமும் சண்டை போட்டால், அவள் என்னிடம் வந்து சொல்வாள், நான் அவளிட நீ சண்டை போட்ட, நீ போ என்கிட்ட வராதே என்று கூறுவேன்.
அவள் அழுதால் என்றால் மூக்கில் இரத்தம் வழியும், இந்த பிரச்சனை இருப்பது எனக்கு தெரியும், ஒரு முறை அப்படி தான் அவளை ஏதோ கோபத்தில் திட்டிவிட்டேன், இதனால் அவளுக்கு மூக்கில் இரத்தம் அதிகம் வந்துள்ளது.
அதைக் கூட நான் கவனிக்காமல் இருந்தேன், அப்போது அவள் அம்மா வந்து என்னை அழைத்து கொண்டே இருந்தார். எதுவா இருந்தாலும் இப்போ சொல்லுங்க, இங்கே சொல்லுங்க என்று கூறினேன்.
அதன் பின் தன் உண்மை தெரிந்து அங்கே போகிறேன் அவள் வைத்திருந்த டவளில் அவ்ளோ இரத்தம். அதை கண்டவுடன் மனம் மாறினேன், அவளுக்காக வாழவேண்டும் நினைத்தேன்.
ஆனால் அவள் அப்போதும் என்னை நம்பவில்லை, பல முயற்சிகள் எடுத்தேன் எல்லாம் தோல்வியில் முடிந்தது. அப்போது அவள் என்னிடம் குடும்பத்துடன் நேரம் ஒதுக்க வேண்டும், குழந்தையை பார்க்க வேண்டும் என்றெல்லாம் சத்தியம் கேட்டாள், அதை செய்து கொடுத்தேன் அதன் பின் தான் சகஜமானோம் என்று கண்கலங்கினார்.
அப்படி இருந்த சாண்டி இப்படி மாறுவதற்கு முக்கிய காரணம் என் மனைவி தான் அவளுக்கு ஐ லவ் யூ, அதுமட்டுமின்றி, வீட்டிற்கு சென்றவுடன் நானே இனி எல்லா வேலையும் செய்வேன், பிக்பாஸில் அவ்ளோ கற்றுக் கொண்டேன் என்று கூறினார்.