கெள்சல்யா
பிரபல திரைப்பட நடிகையான கெள்சல்யா தன்னுடைய திரைப்பயணம், வாழ்க்கை, ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 90-களில் பிரபலமான நடிகைகளில் கெள்சல்யாவும் ஒருவர். பெங்களூரைச் சேர்ந்த இவர் மொடலிங் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார்.
ஆனால் அம்மாவின் தோழி மூலம் கெள்சல்யாவுக்கு சொட்டு நீலம் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் சிறு சிறு விளம்பரங்களில் நடித்து வந்த இவருக்கு, மலையாள படமான ஏப்ரல் 19 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின் இந்த படத்தின் விளம்பரங்களைப் பார்த்த ஏசியாநெட் சேனல் இவரை தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் நடிக்க அழைத்துள்ளனர். அதன் பின் தமிழில் கொடிகட்டி பறந்த இவர்,தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
இதனால் ஏன் இதுநாள் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சமீபத்தில் பிரபல தமிழ் ஊடகம் பேட்டி எடுத்தது. அதில் இவர் கல்யாணம் செய்து கொண்டு என் குடும்பம், என் கணவர், என் குழந்தைகள் என்று மிகவும் குறுகிய எண்ணத்தோடு எனக்கு வாழ விருப்பமில்லை.
பரந்த மனப்பான்மையோட எல்லோருக்காகவும் இயங்க வேண்டும் என்று விரும்புறேன். அதற்கான முயற்சியில் இருக்கிறேன். அதுமட்டுமின்றி இப்படி சிங்கிளா இருக்குறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. அதனால் இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.