தீவிர காதலில் இருக்கும் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர் ! நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு உறுதி படுத்திய ஹரிஷ் !

197

ஹரிஷ் கல்யாண்…

ஹரிஷ் கல்யாண் கடைசியாக தாராள பிரபுவில் நடித்தார், இது விமர்சகர்களிடமிருந்தும் பொது பார்வையாளர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. அதன் பிறகு இந்த படம் தியேட்டர்களில் CORONA தொற்று காரணமாக எடுக்கப்பட்டது.

தற்போது விஜய் தேவரகொண்டாவின் பெல்லி சூபுலுவின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்துவிட்டது என்றும், அதனால் பிரியா பவானி ஷங்கரின் காதலருக்கும் பொய்யா சண்டை என்று கிசுகிசு வந்தது. அதன் பின்பு அது வதந்தி என்று பிரியா பவானி ஷங்கர் தெளிவுபடுத்தினார்.

இந்த நிலையில், ஹரிஷ் கல்யாண் அவர்கள், “Harish Hearts Priya” என்று இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை Share செய்து உள்ளார். இதை பார்த்த பிரியா, ” லாக் டவுன் முடியிற வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியாதா ?” என்று கோபமாக கேட்டுள்ளார்.

அதற்கு உடனே, ” காத்திருக்க முடியாது! காத்திருக்க வேண்டாம்! நான் அதை நாளை மாலை 5 மணிக்கு சொல்லுறன்” என்று இன்னொரு டிவிட் போட்டுள்ளார்.

இதை பார்த்த பிரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் என்னடா இது தலைவிக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டிருக்கையில், இது படத்தின் Promotion Planningக்காக, படக்குழு செய்யும் வேலை என தகவல் வெளியாகி உள்ளது.