சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவை இவ்வளவு அழகா ? வைரலாகும் புகைப்படம் !

68

இந்தியா……..

இந்தியாவின் இரு பிரம்மாண்டகளான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் முதன்முறையாக இணைந்த பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் வெளியான “சிவாஜி”.

இந்த படம் ரிலீசான காலகட்டங்களில் அதனுடன் வெளியான எந்த படங்களும் எந்த தியேட்டரிலும் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப் படாததால் இந்த படம் தனியாகவே எல்லா தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆனது. 100% தியேட்டர்களில் ரிலீஸ் ஆனாலும், ஒவ்வொரு திரையரங்கிலும் 100 சதவீத மக்கள் இருந்தார்கள்.

இந்த படத்தை பிளாக் டிக்கெட்டில் பார்க்க ஒரு ஆளுக்கு 5,000 ரூபாய்க்கு வாங்கிய கதை இன்று வரை பிரபலம். அந்த அளவிற்கு மிளகாய் பஜ்ஜி கணக்காக Ticket விற்பனையானது. ரஜினியும், பெரிய இயக்குனர்களும் சேர்ந்து படம் செய்தால் அந்த படம் தோல்வி அடையும் என்கிற பிம்பத்தை உடைத்ததே சிவாஜி படம்தான்.

இந்த படத்தில் நகைச்சுவை பகுதியில் நடித்த சாலமன் பாப்பையா அவர்களின் மகள்கள் ஆக, அங்கவை சங்கவை என்னும் இரு நடிகைகள் நடித்திருப்பார்கள். அந்த படத்தில் அவர்களின் நிறம் கருமையாக இருப்பதனால் கிண்டல் கேலி செய்து இருப்பார்கள். தற்போது, அவர்களின் உண்மையான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட இப்போ இருக்கும் ஹீரோயின்களுக்கு இணையாக இருக்கிறார்கள் என்பது நெட்டிசன்களின் கருத்து.