வர்மா…….
‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவை,E4 எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க கிரீசயா இயக்கியிருந்தார். ரதன் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த வருடம் வெளியாகி தோல்வி அடைந்தது.
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமான இப்படம் தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தை கொண்டு ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் ஆதித்யா வர்மா ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே.
இந்நிலையில் இதற்கு முன் பாலா எடுத்த வர்மா படம் குறித்து அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார், ”வர்மா’ படத்தில் இயக்குநர் பாலாவுடன் பணிபுரிந்தது புதுவிதமான அனுபவம்.. அந்த படம் வெளியாக முடியாமல் போனதில் எங்களுக்கு வருத்தம் என்பதைவிட, ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்காமல் போகிறதே என்கிற ஆதங்கம் தான் அதிகமாக இருக்கிறது.
. நான் இரண்டு படத்தையும் பார்த்துவிட்டேன்.. நிச்சயம் பாலாவின் ’வர்மா’ ஒருபடி மேலே தான் இருக்கிறது”. என கூறியிருந்தார்.அதன் பிறகு, வர்மா படம் வருமா வருமா என்று காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.
தற்போதைய வர்மா படம், வரும் 6-ஆம் தேதி, Simply South என்னும் OTTஇல் ரிலீஸாக உள்ளது. இதனால் பாலா ரசிகர்கள் குஷியாக இருக்கிறார்கள்.
It’s official get ready to watch #Bala‘s much-awaited #Varmaa
from 6th Oct exclusively only on #SimplySouth!First time ever 2 Tamil films with same hero directed by different directors based on same remake- #ArjunReddy! @e4echennai #DhruvVikram #VarmaaOnSimplySouth pic.twitter.com/g8WSzEdsNP
— Sreedhar Pillai (@sri50) October 1, 2020