இருட்டு அறையில் முரட்டு குத்து 2-வின் போஸ்டர் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

152

இருட்டு அறையில் முரட்டு குத்து 2………

புராண காவியங்களில் ஒன்றான சூப்பர் ஹிட் ADULT COMEDY ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’வின் தொடர்ச்சியாம் இந்த இரண்டாம் குத்து. இதன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு முடிந்து சென்சார் கூட ஆகி A certificate வாங்கியுள்ளது.

இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஊரடங்கு காரணமாக இத்தனை நாட்கள் திரையரங்கம் மூடப்பட்டு இருந்ததால், அவதிப்பட்ட இளைஞர்களுக்கு தற்போதைய நற்செய்தி என்ன என்றால் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் தியேட்டர்கள் மேக்கப் போடலாம் என மத்திய அரசு அறிவித்துவிட்டது. தொடக்கமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாவது படம்தான் முதலில் ரிலீசாக உள்ளது.

அது குறித்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர், அவ்வளவு ஆபாசமாக இருக்கிறது. என்ன தான் அடல்ட் படமாக இருந்தாலும் இவ்வளவு ஆபாசம் தேவையா ? என்று சர்ச்சையை எழுப்பியுள்ளது படத்தின் போஸ்டர்.