வெளியான சிம்புவின் அடுத்த படத்தின் Update – அட இவர்தான் Director-ஆ ? அப்போ வெறித்தனம் !

97

நடிகர் சிம்பு…

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு நடித்து வருபவர் நடிகர் சிம்பு. ஒரு பாடலால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், Dance – னால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், படம் மூலியமாக ஃபேமஸ் ஆன ஹீரோவை கூட பார்த்து இருப்பீர்கள், Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ தலைவன் சிம்பு மட்டுமே.

ஒரு வழியாக லாக் டவுன் காரணமாக இழு இழு என இழுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் துவங்க உள்ள நிலையில், தற்போது சிம்புவின் அடுத்த படத்தின் அப்டேட் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.

தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வரும் சுசீந்திரன், இந்த முறை வெற்றி படம் கொடுத்தே தீரவேண்டும் என்று நடிகர் ஜெயை கதாநாயகனாக வைத்து ஊரடங்கு நேரத்திலேயே ஒரு படத்தை எடுத்து முடித்து விட்டார்.

தற்போது ஒரு நல்ல கிராமத்துக் கதையை சிம்புவிடம் சொல்ல சிம்புவுக்கு மிகவும் பிடித்து போக இன்னும் ஓரிரு வாரத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. மொத்தம் 30 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டுமென்று மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார் சுசீந்திரன்.

இயக்குனரை என்னவோ 30 நாட்களுக்கு படப்பிடிப்பை முடித்து விடுவார் ஆனால் நம்ம தலைவன் கரெக்ட்டா வரணும் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் சிம்புதான். மேலும் இந்த படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற தகவல்கள் இன்னும் வரவில்லை.