நடிகர் விஜய் கொடுத்த ஷாக் – இன்ப அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜ்!!

80

லோகேஷ் கனகராஜ்…

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் படத்தை பார்த்து முடித்த விஜய், படம் திருப்திகரமாக இருந்ததால் இயக்குநரை அழைத்து பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளார்.

பொதுவாகவே, திரைப்படம் சிறப்பாக அமைந்திருந்தால் அந்த இயக்குநருக்கு அன்பளிப்போ அல்லது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்போ வழங்கி சந்தோஷத்தில் திக்கு முக்காட வைப்பது விஜயின் வழக்கம். எனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விஜய் மீண்டும் படவாய்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.